அஸ்கா அதிக விலை
விற்ற காலத்தில்
நாட்டுச் சக்கரை நாட
தேநீர் கடைகளில்
அஸ்கா தேநீர்
நாட்டுச் சக்கரை தேநீர்
மானிய விலையில்
அஸ்கா ரேஷனில் கிடைக்க
அஸ்காவுக்கு மாற
அஸ்கா நலத்திற்கு கேடாக
நாட்டுச் சக்கரைக்கு மாற
நாட்டுச் சக்கரை விலை உயர
இனிப்பிலே வெள்ளையேது
பழுப்பேது மனிதனில்
கருப்பேது வெள்ளையேது
எல்லோரும் ஒன்றுதானே
க.ரவீந்திரன்.