இனிப்பு மிட்டாய் சுவைத்தால் சின்ன குழந்தையாக மாறிவிடு
இனிய சிரிப்பு முகத்தில் மலர்ந்து நிற்கும்.
வண்ண வண்ணக் காகிதத்தில் சுருட்டி கிடக்கும்,
ஆசை குரலில் மழலைகள் கேட்கும்.
உணர்வுடன் சுவையில் சேர்ந்து உயிருடன் சேரும்.
உலகமே இன்பம் என நெஞ்சமும் இனிக்கும்
பகிர்ந்து சாப்பிட்டால் நட்பும் வளரும்,
பாசம் கலந்து வாழ்வு இனிக்கும்.
சிறு மிட்டாயில் பெரிய மகிழ்ச்சி,
இதயத்தில் நிற்கும் இனிய நினைவு அதுதான் இனிப்பு மிட்டாய்.
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: இனிப்பு மிட்டாய்
previous post
