படம் பார்த்து கவி: இனிய தனிமை

by admin 1
32 views
  • இனிய தனிமை*
    உறக்கம் மறந்து கதைத்ததில்
    இரவின் விழிகள்
    மூட மறுத்துவிட்டன,;
    மின் விளக்கு வெளிச்சம்
    போதும் உயிரில்லையானாலும்
    தனிமையுடன்
    உரையாடி இல்லை
    உறவாடி தீர்க்க…
    உறவுகள் இல்லை
    உறைந்து போகவில்லை,;
    இரவின் உறவுடன்
    இனிமை தனிமையுடன்
    ஒளி விளக்கின் கீழ்
    பஞ்சு மெத்தையின் மேல்
    படுத்துறங்க மன மின்றி
    மன அமைதியோடு
    அமர்ந்து கதைத்து விட்டோம்….
    கடவுளின் கைகளில்
    அனைவருமே
    பொம்மைகள் தான்,!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!