உடை உடை
தேங்காயை உடையடா
விலை விலை
ஏறுதடா
இங்கே
பிட்டுக்கு
தேங்காய் பூ
இல்லையடா
சம்பலும் இல்லையடா
சாம்பாறும் இல்லையடா
நாயும் தேங்காய் சில்லுடன்
போராட்டம் நடத்து தேடா
தேங்காய் பிளந்தா சுபம்மாம்டா
சிதறினால் அமங்கலமாம்டா
தேங்காயின் விலையும்
மானிடரின்
அறியாமையும்
என்றுதான் மாறும்மோ இறைவா…
M. W Kandeepan🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)