எனக்காக உழைத்து உருகும்
அவள் கால் பிடித்து படியே
கடவுளிடம் மனமுருகி சொன்னேன்
அவள் காதல் கிடைத்து விட்டது
எங்களுக்கான சாதலை
இன்னும்
ஆயிரமாண்டுகளுக்கு
தள்ளி வைத்தால் தான் என்ன?
இப்பிரபஞ்சத்தில்
எவனும்,
எவளும்
இப்படி காதலிக்க வில்லையென
உலக மெச்ச
அவளை சலிக்காமல்
இன்னும்,இன்னுமென
காதல் செய்ய வேண்டுமென!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
