என் சிறு வயதில் நீ என்னிடம் வந்தபோது…
எனக்கு நீ அவமானமாய் மாறி போனாய்…
சோடாபுட்டி என அழைக்கும் போது…
உன்னை தூக்கி உடைக்கலாம் போல கோபம் கொண்டேன்…
சில வருடங்களில் கண்ணாடிக்காரன் என என் அடையாளமாய் மாறி போனாய்…
அப்போதும் உன் மீது அதீத கோபம் கொண்டேன்…
உன்னை அணிந்திருப்பதால் திருமணம் செய்ய பெண்கள் நிராகரித்த போது மீண்டும் உன்மீது வெறுப்பானேன்…
சில நாட்களுக்கு முன் கூட உன்னை என் மீதமுள்ள வாழ்க்கையில் இருந்து தூக்கி எறியலாம் என அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரை நாடினேன்….
காலம் கடந்தது என கூறி விட்டனர்…
இப்போது கோபப்பட்டு புண்ணியம் இல்லை…
ஆனால் இத்தனை கோபம் உன்மீது கொண்ட போதிலும் நீ எனக்கு எப்போதும் இந்த உலகை அழகாகவும் தெளிவாகவுமே காட்டினாய்…
இந்த உலகை உன் வழியே கண்டு ரசித்த நான் உன்னை ரசிக்காமல் போனது ஏனோ……
புவனா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)