கசந்திடும் காயெனினும்
வசம்தரும் வாழ்வினிலே
நிசம் அதை அறிவீரோ
விசமில்லை உணர்வீரோ
சுவையினிலே சுகம் இல்லை
சுகமதிலே சுகம்தரவே
சுகம் பெறவே வேணுமேனில்
சுகித்திடுவோம் சுவையது பாராதே
பசுமையின் அழகுடன்
பார்க்கவே பொலிவுடன்
தன் சுவையில் தரமின்றி
இன்சுவை இழந்திடினும்
நேசமிகு நெஞ்சுடையோர்
வேசமிலா பாசமென
கசந்திடும் கடும் சொல்லிலுமே
கனிவுமிகு கரிசனை(யோ)யே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
