கடவுளை ஆராதிக்க உன்னை படைப்பார்கள் பெண்களின் அரசி நீ…பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் அவர்கள் வாழ்வில் ஒரு அங்கம் நீ…பெண்கள் பிறந்தால் அவர்கள் தொட்டிலை அலங்கரிப்பது நீ…வயதுக்கு வந்தால் அவர்கள் தலையில் அலங்கரிப்பது நீ…திருமணம், வளைகாப்பு எல்லாவற்றிலும் நீ…எல்லாவற்றிலும் இருக்கும் நீ அவர்கள் விதவை கோலம் கொண்டால் மட்டும் அவர்களை விட்டு விலகிவிடுவது ஏனோ மனிதர்களை போல நீ எப்போ பேதம் பார்க்க கற்று கொண்டாய்…!
(மிதிலா மகாதேவ்)