படம் பார்த்து கவி:   கண்களால் காமம் செய்யாதே!

by admin 1
77 views

உன் விரல் பட்ட
செல்போன்
எத்தனை முறை
உன் கூட செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கும் என்பதை
நான் மட்டுமே அறிவேன்
காற்றில் பரவும்
உன் குரல்களை
காற்றலைகள் திகட்ட திகட்ட
சேமித்து வைத்து கொள்கின்றன
நீ வீதி நடக்கும் தருவாயில்
ஒரு முத்தத்தையாவது தந்து விட்டு தான் செல்கிறது
அந்த பாழாய் போன மழை .
அந்த மேகக்கூட்டங்கள் எல்லாம்
உன்னை வளைத்து போட
திட்டமிடுவதை திருட்டு பையன் நானறிவேன்
உன்னை மடியில் வைத்து தாலாட்ட
பூமி தேவனும் காத்திருக்கிறான்
பஞ்ச பூதங்களும்
உன்னை மட்டும் தானடி
காதல் கொள்ள காத்திருக்கின்றன
பாவி நான் காதலித்தால் என்ன ??
நீ கண் கொண்டு
என்னை பார்க்க வில்லை -ஆனால்
என் கண்ணுக்கு கண்ணாய்
நீ மட்டும் தானடி இருக்கிறாய்
வார்த்தைகள் வராமலே
உன் உதடுகள் மட்டும் தான்
இவ்வுலகில் எனக்கான மொழி பேசுகின்றன
காதல் -காமம் பேசும்
உன் விழிகளை
ஒரு நொடி மூடி கொள்
நிம்மதி பெருமூச்சடைவேன்
கிடைக்காத உன் காதலின் நினைவுகளோடு !!

நௌஷாத் கான் .லி

You may also like

Leave a Comment

error: Content is protected !!