கந்தல் துணி கட்டிய
சாவி கொத்திருக்கு
ஐந்து சாவி அதிலிருக்கு
ஒன்றோடு ஒன்று உரசி
உண்டாக்கும் ஒலியாலே
திருட்டை அது தடுக்கும்
பூட்டுக்கு ஒரு சாவியிருக்கும்
ஐந்து சாவியும்
ஒரு பூட்டுக்கா இருக்கும்
அவள் மனம் எனும் கதவை
பூட்டிய பூட்டை திறக்க
அன்பு அறிவு அசல் அஞ்சாமை அழகு
என ஐந்து சாவி வேண்டும்
சர் கணேஷ்