காரிகையின் கரிய விழிகள்
அஞ்சனம் அழிய அழுகின்றன..
கடந்து விட்டேன்
மறந்து விட்டேன்
இழந்து விட்டேன் என்ற
கரும் பக்கங்கள் மொழிகையில்….
இழந்து விடவுமில்லை
இறந்து விடவுமில்லை…
உருவமாய் நானிருக்க
அருவம் தேடுகிறாய்…
வீணையாய் நானிருக்க மீட்டும் விரல்கள் முடக்குகிறாய். …
வேர் விட்ட என் காதலை தூர்வாரிச் சென்றாய் நீ…
சரி தானே
விறகு விற்பவனுக்கு வீணையென்ன விறகென்ன
இரண்டுமே மரம் தானே..
இளவெயினி…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)