கூர்முனை
ஈரமில்லா பூமியின்
சொந்தக்காரன் நீயே,
கருஞ்சிவப்பு நிறத்தில்
தோன்றிடுவாயே,
வாழ்முனைபோல்
கூர்முனை உடலை
பெற்றிடுவாயே,
உனை கண்டும்
காணாமல் நகர்ந்தால்
செல்லமாய் கீரிடுவாயே,
மேலும் கீழுமாய்
உன் மேனியே
பலர் கால்கலை
முத்தமிட காத்து
கிடக்கின்றனவே
பலரின் உதிரத்தில்
நனைந்த தனாளேயே
கருஞ்சிவப்பு நிறத்தில்
பிறந்து விட்டாயோ,
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
