கைச்சங்கிலி
வளையல்….
மையிட்ட கண்களும்
நடுவே பொட்டும்
பொட்டின் மேல்
சுருள் முடியும்.. என
மயங்கிய என்னை
மீட்டெடுத்து பார்த்தேன்….
ஆடிய ஜிமிக்கி
இதயத்தை ஈர்த்தது.
முத்து மாலையும்
வண்ணச் சேலையும்
சரசரக்க அளந்து நடக்கும் நடையில்
கொலுசு சந்தம்
கவிதை கூற…
என்ன சத்தம் இது?
புது வித தாளமா
கண் நிமிர்த்தினேன்
கண்டேன் கைகளில்
கைகளின் வீச்சில்
வளையல்கள்
ஜதி பாட…
மின்னலாய் வந்தாள்
அன்ன நடையாள்..
கைச் சங்கிலியால்
கட்டினாள் என்னை
கட்டுண்டேன் நான்..
S. முத்துக்குமார்