சூரியன் உதித்ததும்
விடிந்து விடுவதாக எல்லோரும் நம்புகிறார்கள்..!!!
எனக்காகவே நீ தயாரித்து கொடுக்கும் தேநீர் கோப்பையின் வாசத்தில் தான் என் காலை விடிகிறது..,
உன் அணைப்பில் இரவை தொலைத்து..,
அன்பின் தேநீரால் காலையை உலர்த்துகிறேன்..!!!
என் ஆசையின் வைகறை.,
காதலின் அந்தி..,
ஊடலின் இரவென்று
எல்லா பொழுதுகளுமாகிப் போகிறாய் காதலின் திணையே..!!! மீ. யூசுப் ஜாகிர்❤️