செந்நிற சிங்காரி
பச்சை தொப்பிகாரி..
செந்நிற மேனிகாரி..
சிவப்பில்லா குருதிகாரி..
நீர் நிறைந்த செவ்வாப்பிள்காரி..
ஊட்டச்சத்துள்ள அதிசய பழக்காரி..
கொழுப்பை குறைக்கும் கெட்டிகாரியாய்
உலா வரும் செந்நிற சிங்காரி
செவப்பியை ருசித்திட..
கத்தியின் கூர்மை வெட்டிட..
அந்த ஊடலில் தக்காளி
தன் செந்நீரை கத்தியில் வடித்திட..
உணவின் ருசி கூடிடுமே…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)