செம்பருத்தி..
எளிமைக்கு
ஓர் அழகுண்டு
கம்பீரமுண்டு…
செம்பருத்தியே —
நீ ஆண்டவன்
அணியும் அழகு மலர்
எந்த நிறத்தில்
பூத்தாலும் — நீ
‘செம்பருத்தி’ தான்!
சிறிது நேரமே நீ
ஆராதனை செய்தாலும்
ஆண்டவன்
அழகு பெறுகிறான்.
மல்லிகை ரோஜா
போல் மயக்கும்
மணம் இல்லை…
தெய்வீகம் உண்டு.
இதயம் காக்கும்
உதிரம் காக்கும்
தலைமுடி வளர
தளராமல் உதவும்.
அனைவர் வீட்டிலும்
அன்பாய் வளரும்..
அழகு மலர்
செம்பருத்தி..!
S. முத்துக்குமார்
