படம் பார்த்து கவி: சொந்த வீடு

by admin 1
93 views

வீடு என்பது உங்களுக்கு
சாதாரண வார்த்தையாக தெரியலாம்-ஆனால்
என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சதா இரணம் கொடுத்த வார்த்தையென உங்களுக்கு தெரியாது
இன்னும் எத்தனை குடி தூக்கப்போற
இந்த வாடகை வீட்டுக்கு அப்புறமாவது
சொந்த வீடு கட்டுவீங்களா?
இல்லை வேறொரு குடி தூக்குவீங்களா என
தாய் மாமாவின் ஏச்சு பேச்சுக்குமே ஆளானவன்
அந்த நேரத்தில் எல்லாம்
அம்மாவும்,அத்தாவும் கூனி குறுகி நின்றதை கண்டால் மனம் பதை பதைத்து தான் போகிறது
வாடகை வீடு மாற்றும் போதெல்லாம்
அத்தாவும்-அம்மாவும் முன் நின்றதே இல்லை
மூத்த மகனாக முன்னின்று நானே செய்ததுண்டு
சொந்த வீடு என்பது என் அம்மாவின் பல நாள் ஆசை
சொந்த வீடு என்பது என் அப்பாவின் பல வருட கனவு
என் தலைமுறையில் எல்லோருடைய
ஆசை,கனவு நிறைவேறும் சமயத்தில்
அரைகுறையாய் கட்டி முடிக்கப் பட்ட
வீட்டின் முன் வாசலில் இருந்து
அத்தாவின் ஜனாஷா எடுத்து செல்லப்பட்டது
இன்னும் மாறாத வடுவாக தான் மாறி போய் இருக்கிறது.

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!