உயிரையும் மெய்யையும்
உருக வைக்கும் எழுத்துக்களின்
ஏகோபித்த ராணி நீ…..
வான் புகழ் வள்ளுவனின்
எழுத்தாணியில் எழுசீர்
வெண்பாவாய் மலர்ந்த
எம் தாய்த் தமிழ் எழுத்துக்கள்
பாமாலையாய் மட்டுமல்ல
உதிரிகளாயும் சிறப்பே!
ஒவ்வொரு சொல்லிலும்
ஒரு பாணி….
ஒவ்வொரு பாணியிலும்
ஒரு சொல்…
உச்சரித்து மகிழும்
இன்பம் ஈந்த தாயே
வாழ்த்த வயதில்லை
தாள் பணிந்து
வணங்குகிறேன் நின்னையே!
நாபா.மீரா