திறந்திடுவாயோ திறவா கதவே
இரும்பு கதவினும் இறுகிய இதயமே
இதயத்தின் வாசலிலே இறைஞ்சியே நிற்கின்றேனே
இரவெது பகலெது பாராது நிற்கின்றேனே
இரக்கமிகு இரவோனாய்
இதயம் திறந்தே ஒளிர்வாயோ
இறவா உனதன்பை இரங்கியே இரந்திடுவாயெனில்
இணையிலா உனதன்பாலே
இன்பமாகிடுமே
இனிவரும் என்னினிய நாளெலாமுமே
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
