தென் மேற்கு மூலையில
தன்னந்தனி கேணியில
தண்ணீ வத்தாமத் தானிருக்கு
மரத்தாலே உருளை இருக்கு
தண்ணி இழுத்து ஊத்த
இடுப்பளவு வாளி இருக்கு
இரைச்சு ஊத்த ஆளில்லை
காணி நிலமும் காஞ்சிருச்சு
பம்பு சொட்டு ஒன்னு வச்சுபுட்டா
கிணறு எல்லாம் வத்திபோகும்
தண்ணீ காணல் நீரா போகும்
சர் கணேஷ்
