தூரத்தில் வெளிச்சப்
புள்ளிகள்..
மனிதன் புழங்கும்
இடங்கள்…
மரங்கள் அடர்ந்த
இருட்டில்…
பயம் காட்டவே ஒரு
வெளிச்சக் கம்பம்.
அதனடியில்
அலங்கார இருக்கை.
மரக்கிளையில்
மாய்ந்து போய்
மாறுதலுக்காய்
விளக்கடியில்
பெஞ்சில்
அமர்ந்தது அது!
டெட்டி பேர் ஆ
வெள்ளைப் பூனையா…
அருகில் போனேன்
ஆடிப் பார்க்க…
அரண்டு போனேன்
அதைக் காணாமல்
‘கெக்கெக்கே’ என
தேய்ந்த சிரிப்பில்
வேர்த்துப் போய்
அலறி ஓடினேன்…
திரும்பிப் பார்த்தேன்
பெஞ்சின் நடுவில்
சிரித்தபடி ‘வா..’வென
அதே பேய்…
S. முத்துக்குமார்