நாளை என்பது
நம் கையிலேயே இல்லை
அன்புக்கு அடிமையாக நினைக்கும்
அற்ப மனிதபிறவி நாம்
இருக்கும் வரை
எந்த உயிர்க்கும்
இதயம் நோகும்படி
உபத்திரவம் செய்யாதே
நம் உயிரெல்லாம்
அந்த பாசக்கயிற்றில் தான் உள்ளது
ஒரு போதும் உண்மைகளை
மறந்து விடாதே
மறுத்து விடாதே
இருக்கும் வரை
பேரன்பை பூமியில்
விதைத்து விட்டு போ!
-லி.நௌஷாத் கான்-
