படம் பார்த்து கவி: நீங்கா நினைவு

by admin 1
36 views

மக்காச் சோளம்
மக்காத நினைவுகள்

சுட்ட சோளம்..
கருப்பு புள்ளியிட்ட
தங்க முத்துக்கள்..
வரிசையாய் கடித்து
வாய்வலிக்க
ரசித்தோம்…

ஸ்வீட் கார்ன்ஸ் -என்று நம்முடைய
ஸ்வீட் குட்டிஸ்
வலிக்காமல் கடித்து
வேலையை எளிமையாக்குது..

உலகின் ஆதிப் பயிராம்
மக்காச் சோளமே..
உலகின் பாதி எளியோற்கு
நீயே உணவாம்…

நிறைந்த சத்தால்
நிறைந்தாய் மனதில்


S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!