நீல வண்ண நிறக் குழாய் /
நீண்டு சுருண்டு கிடக்கும் குழாய்/
செடிகளுக்கு நீர் பாய்ச்ச தேவை /
செந்தளிர் மலர தேவை உயிர்நீர் /
பூத்துக் குலுங்கும் வண்ண மலர்/
பூவையர் தலைகளை அலங்கரிக்கும் தினமும் /
அனைத்தும் நடப்பது உன் சேவையில் /
அழகான நீயும் உதவுகிறாய் உவந்து//
ருக்மணி வெங்கட்ராமன்
