குளிர்சாதனப் பெட்டியாய்
தளர் நடையிட்டு வந்தாய்
குளிர் வெயில் எக்காலத்திலும் மிளிரும் உன்னை விரும்புபவர்களுக்கு
கரும்பாக இனித்துக்
காட்டுகிறாய் சொர்க்கம். பிடிக்காதவர்கள் இல்லை
என்றாலும்………
நேற்றைய சமையலை
சற்றே சூடு செய்து
முற்றிலும் இல்லாவிடிலும்
சிறிது சுவையுடன்
பெரிய பசியை போக்குவதால் உன்னை பிடித்தவர்களே
அதிகம் என உணர்ந்தேன்.
உஷா முத்துராமன்
