அசைந்து அசைந்து
நடக்கும் நடை அழகியே
நீ பனி மேல் சறுக்கி
விளையாடும் அழகில்
மயங்கினேன்
இரை தேட நீந்தும் உன்
வேகத்தை கண்டு வியந்தேன்
இரையாக நீ மாட்டும் போது உன்
தவிப்பை கண்டு கலங்கினேன் – எங்கோ
கோடியில் இருக்கும் உன்னை
டிவியில் காண்கையில் உன்
நடையும் நடனமும் என்
உள்ளத்திற்கு
மகிழ்ச்சியும் குளிர்ச்சியும்
தருகிறதே..
— அருள்மொழி மணவாளன்
