மக்கட் பேறு
காதலின் பரிசு திருமணம்
திருமணத்தின் பரிசு குழவி
மக்கட் பேறு பெண்ணுக்கு
தாய் எனும் அங்கீகாரம் தர
அளவான குடும்பம் எனக்
கட்டுப்படுத்தும் சமுதாயம்
குழந்தை இன்மையை குறை
சொல்வது என்ன நியாயம்
குழந்தைக்காக தவம் கிடந்து
ஆலயம் ஆலயமாக ஏறி இறங்கி
மருத்துவ மனைகளைத் தேடி
பெரும் செலவு செய்து
சோதனைக் குழாய் குழவியின்
மென் பஞ்சு பாதம் தொட்டாள்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)