கதை பேசி கலக்கும்
கவிபாடி மகிழும்
விளம்பரம் சொல்லி வியக்க வைக்கும்
விவசாய குறிப்பு கூறி விருந்து வைக்கும்
எண்ணத்தின் ஓட்டத்தை வண்ணமயமாக்கும்
ரீங்காரமிடும் வண்டு
ஓங்காரமிடும் செண்டு
வேளை பழுவை குறைக்கும் தேவதை
டீக்கடையின் நாயகன்
பயணிகளுக்கு பகலவன்
செவி கொடுத்தால்
மனதை பறித்து செல்வான்
மாய வித்தை காட்டும்
பெட்டி!!!
கவிஞர் வாசவிசாமிநாதன்
