மயிலோடு உறவாட
இரயில் ஏறி வரும்போது
கொதி நீரில் உருவாகும்
நீராவி அதுபோல
மனத்தவிப்பை
எவ்வாறு உரைப்பேனடி?
இடுப்போடும் மடிப்போடு
உருவாகும் இரு கோடு
இரயில் ஓடும் தடம்
என்று நினைத்தேனடி
நீராவி புகை எல்லாம்
மலை மீது முகிலாக
உன் அலையாடும் குழலாக
அசைந்தாட கண்டேனடி
இரயில் ஓடும் தடம் அருகில்
உருவான ஒரு மலரில்
உறங்காமல் கரு வண்டு
சொல்லாத சோகத்தோடு
உன் விழியாக
உரு மாற கண்டேனடி
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)