முகம் அறியாதவர்கள்
முகவரி ஆகின முகநூலிலே
அகம் அறிந்ததை
அயலவர் அறிந்திட
ஆவலாகியே
இகம் அறியா நிலையாகி
சுகம் இழந்திடும்
சோகம் ஆகிடுமோ
போகம் பெரிதல்லவே
யோகம் அடைந்திடவெனும் விவேகம் அறிந்திடில்
யுகம் உள்ள யாவருமே
நுகமிலா நுகமாகின
வழுவில்லா சினேகம் அறிந்திடுவோமே
முகநூலில்
முதல் வரி முதல்
முடிவு வரை
முன்பின் அறியாதவரெனினும்
அன்பின் முகவரியாகி இணைந்திருக்கும்
நற்பண்பில் நிலைத்திருப்போமே
ஜே ஜெயபிரபா