மூங்கில் கூடையில் கூடியிருக்கும் உதிரிபூக்களே மணம் எனும் மொழியிலே வாசம் வீசுங்களேன் வண்ணங்களில் வேறுபாடு இல்லை எனும் போதிலே வாழ்க்கையிலே தரம் மாறுது வாழும் ஒருநாளிலே மாலையாய் நீயும் மணப்பந்தல் காணலாம் தேவன் கோயிலிலே தெய்வநிலை ஏறலாம் மஞ்சத்திலே மயங்கி உயிர் உருவாக்கலாம்உயிரற்ற உடலோடு உறவாடலாம்எந்த நிலை எடுத்த போதும்உந்தன் நிலை மாறாதுமணம் வீசும் மனம்எனக்கு வாய்த்து விட்டால்மல்லிகையாய் மலர்ந்திடுவேன் வாழும் காலமெல்லாம்
சர் கணேஷ்