எண்ணத்தையும் எழுத்தையும்
காட்சியையும் ஓசையையும்
அசை பிரித்து சீர் தூக்கி
பூஜ்ஜியம் ஒன்று என்று
அதிர்வெண் ஆக மாற்றி
காற்றின் அலைவரிசையில்
ஒளியின் வேகத்தில்
கடத்தி சென்று
காட்சி படுத்தும்
அற்புத படைப்பே!
மண்ணை உண்ட
கண்ணன் வாயில்
உலகம் கண்ட யசோதை போலே
கருப்பு வண்ண கண்ணாடியில்
சுற்றும் உலகம் காட்டும்
கண்ணன் நீ யென்றால்
யசோதை நானன்றோ!
சர் கணேஷ்
