வண்ணங்களால்
இயற்கை
எண்ணங்களால்
வாழ்க்கை…
வானும் நீலம்
கடலும் நீலம்….
என்றாலும் இரண்டும்
மாயை
நீலம் பூத்த விழியென்று மயக்கம்..
நீலம் பூத்த உடல்
நஞ்சென்று நடுக்கம்…
ஊதாவும் இளம் பச்சையும்
உன்னுள்ளே
பதிந்திருக்க
வெள்ளையில் கலந்து மனதில்
நிலைத்தது.
தூரிகை வண்ணங்கள்
வரையப்பட்ட
கவிதைகள்….
S. முத்துக்குமார்