அமாவாசை அன்று
அழகு நிலா
இருள் சூழ
இகம் அதிலே
ஒளி அதனை
ஒளித்து வைத்ததுவாய்
பார்க்க பாங்கிலாததாய்
பரபரவென முள்ளதுபோல்
வெளியே தெரிந்தாலும்
உள்ளிருக்கும் உண்மையறிந்தால்
கரடும் இல்லை
முரடும் இல்லை
கனிந்த கனியின்
நனி சுவையறிவீர்
வெளித்தோற்றம் எல்லாம்
வேசம் ஆகிடுமே
உள் உணர்ந்திடுவோமே…
ஜே ஜெயபிரபா
