மனங்கள் புரிதல் துறந்து
மணங்கள் பொய்த்து….
ஒரு புறம் அகவை கூடியும்
கைகூடாத் திருமணங்கள் ….
அன்று பாரதி தேடிய
புதுமைப்பெண்கள்
இன்று எடுத்திருப்பதோ
புதிய அவதாரம்…..
இன்று விவாகம்….
நாளை ரத்து…..
கலாச்சாரம் கானல்
உணர்வுகளாய்…
நினைவுகளாய்….
பேதைகளின்
போதையில் தள்ளாடுதோ?
நாபா.மீரா