மொறு மொறு சிக்கன்

by Nirmal
168 views

தேவையான பொருட்கள் 

  • கோழி இறைச்சி – சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்  
  • ஹெவி கிரீம் – 1 பாக்கெட் 
  • கருப்பு மிளகு – 1 கரண்டி 
  • பூண்டு – ஆறு பல் 
  • மிளகாய் சாந்து – 1 கரண்டி 
  • மஞ்சள் தூள் – 1 கரண்டி 
  • முட்டை – 1 
  • எலுமிச்சை சாறு – தேவையான அளவு 
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • உப்பு – தேவையான அளவு 
  • கோதுமை மாவு – தேவையான அளவு 
  • எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

  • முதலில் பூண்டு மற்றும் கருப்பு மிளகை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின், கறிவேப்பிலையை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு, ஒரு பௌலில் ஹெவி கிரீம், மஞ்சள் தூள், மிளகாய் சாந்து, இடித்த விழுது, நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்துக் நன்றாக கிளறிக் கொள்ளவும்.
  • தொடர்ந்து, ஒரு முழு முட்டையை கிளறிய பாகங்களோடு பௌலில் உடைத்தூற்றி கிண்டிடவும்.
  • அதன் பின்னர், வெட்டிய கோழி இறைச்சி துண்டுகளை கலவை கொண்ட பௌலில் கொட்டி கிண்டிடவும்.
  • பிறகு, கலவையில் கிளறிய கோழி இறைச்சி துண்டுகளை கோதுமை மாவில் ஒற்றியெடுக்கவும்.
  • அவைகளை ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மூடி போட்டு  பதப்படுத்திடவும்.
  • கலவைகளின் சுவையணைத்தும் கோழித்துண்டுகளில் கலந்திட இது  வழிவகுக்கும்.
  • பின், அடுப்பை பற்ற வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • மிதமான சூட்டில் மாவுக் கொண்ட கோழி இறைச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுப்பில் போட்டிடவும்.
  • ஏறக்குறைய 7 – 8 நிமிடங்களில் பொன்னிறமாக வரும் வரை கோழி துண்டுகளை பொரித்தெடுக்கவும்.
  • இறுதியாக, பொரித்த மொறு மொறு சிக்கன் பொரியலை தட்டில் வைத்து  ஸ்னேக்ஸ்சாக பரிமாறிடலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!