தேவையான பொருட்கள்
ரோஜா இதழ்கள் – தேவையான அளவு
கற்கண்டு – ரோஜா இதழுக்கு தேவையான அளவு
தேன் – தேவைக்கு ஏற்ப
வெள்ளரி விதை – தேவைக்கு ஏற்ப
கசகசா – ஒரு பின்ச்
செய்முறை
சிவந்த நிறத்தில் உள்ள ரோஜாவின் இதழ்களை சுத்தம் செய்யவும்.
இதழ்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் போன பிறகு நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.
சேகரித்த இதழின் எடையை போல மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கவும்.
இடித்ததும் ஜாம் போன்ற தன்மையைப் பெரும். இந்த ஜாம் அளவிற்கு 3 மடங்கு சுத்தமான தேனைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரிவிதை, கசகசா சேர்க்கவும்,