தேவையான பொருட்கள்:
- சுரைக்காய் – 3 கப்
- நெய் – 3 டேபிள் ஸ்பூன்
- வெதுவெதுப்பான பால் – 3 கப்
- ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
- சர்க்கரை – 3/4 கப்
- பாதாம் – 7 (நறுக்கியது)
செய்முறை
- முதலில் சுரைக்காயை தோல் நீக்கி நன்கு துருவிக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சுரைக்காயை சேர்த்து, காயின் தண்ணீர் வற்றும் வரை 10 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
- பின்பு அதில் பால் ஊற்றி, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
- பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, சுரைக்காயானது உலர ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
- பின் அதில் பாதாமை சேர்த்து அலங்கரித்து இறக்கி குளிர வைத்து பரிமாறினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!
