மனதின் ரணங்கள் வெள்ளைத்தாளில்
வார்த்தைகள் சுமந்து வரிகளாய்
விழிகள் சொரிந்த துளியில்
கலைந்த எழுத்துக்கள் மங்கலாய்….
ஊமை வலிகள் மட்டுமே
நீங்கா நினைவாய் நெஞ்சில்
பேனா மை போல்
விழியின் மைகள் மூட
துயர் யாவும் கரைந்திடும்
வரம் தாராயோ சர்வேசா?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: மனதில்
previous post