முக்கால்வாசி தோல்விகளின் முத்தான முதற்காரணம்
எட்டிப்போன உறவின்
வாஞ்சை வழியணுப்பி
முடிவினெல்லையில் முடிக்கவிடாது முடக்கிவிடும் சாமர்த்தியக்காரன்
மதியை மறக்கடித்து
முட்டாள் முயல்களாக்கி
கோட்டுக்குள் கட்டிப்போடும்
கடைந்தெடுத்த கெட்டிக்காரன்
கணநேரத்திலென்ற வார்த்தைக்குள் காலத்தைவெல்லும் காரியதாரி
அலட்சியமாகியத(ன்)னை அலட்சியப்படுத்தி
அலட்சியமாய் பயணிப்போரின்
வாகைக்கனியை வேரறுத்து
வாகைசூடும் பேரந்தகன்!
புனிதா பார்த்திபன்