அகம்புறம் : காம்போட்ஜ்

by Admin 4
22 views

குடம்புளி

💠▫️உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது

▫️குடம்புளியில் இருக்கும் கார்சினோல் ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

▫️இது அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால் பக்கவாதத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

▫️கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து அதிகரிக்க இவை பயன்படுத்தலாம்.

💠முட்டுவலி மற்றும் கருப்பை நோய்கள் உள்ளவர்களுக்கு குடம்புளி பழத்தின் கஷாயத்துடன் சிகிச்சை அளிக்கபடுகிறது.

💠அழகிலும் குடம்புளி
சருமத்தை வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் குடம்புளி சருமத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

💠🔸கூந்தல் வளர்ச்சியில் சரியான முறையில் இதை பராமரிக்கும் போது இது உச்சந்தலை முடியின் துளைகளை அடைக்காது

🔸மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

💠🔺வெடிப்பு குணமடைய ஆயுர்வேதத்தில் குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

🔺இதை பசு நெய்யுடன் கலந்து பயன் படுத்தினால் உதடுகள் வறட்சியில்லாமல் மென்மையாக இருக்கும்.

💠🔹யூர்டிகேரியா என்னும் தோல் அழற்சி நோய், படை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க குடம்புளி பயன்படுத்த பட்டு வருகிறது.

🔹அரை டீஸ்பூன் குடம்புளி வெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தோல் ஒவ்வாமை பிரச்சனை நீங்கும்.

💠▪️குடம்புளி நன்மை தரக்கூடியது என்றாலும் அதிக அளவு பயன்படுத்தினால் மோசமான பாதிப்பை உண்டு செய்யும்.

▪️அதனால் மருத்துவ காரணங்களுக்காக தனிப்பட்ட முறையில் பயன்படுத்தினால் மருத்துவரை அணுகி சரியான முறையில் பயன்படுத்துவது நல்லது.

💠பின் குறிப்பு:

✴️தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.

✴️சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!