நீங்க வெயிட் லாஸ் செய்யணும் நினைக்கிறீர்களா? அப்படின்னா இந்த ரெசிபி உங்களுக்கு தான்
👉நான் இன்னைக்கு புழுங்கல் அரிசி எடுத்து இருக்கேன் அதுக்கு பதிலா நீங்க ஏதாவது மிலட்ஸ் மாட்ட ரைஸ் கூட சேர்த்துக்கலாம் செய்யலாம்
♦️தேவையான பொருட்கள் 👇
- 📍புழுங்கல் அரிசி ஒரு கப்
- 📍கொள்ளு முக்கால் கப்
- 📍உப்பு
- 📍தண்ணீர்
- ♦️செய்முறை👇
- 🔹கொள்ளை கடாயில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 🔹கொள்ளு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரே ஒரு பல்ஸ் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 🔹ஒரு பாத்திரத்தில் அரிசி வறுத்து பொடி செய்த கொள்ள சேர்த்துக் கொள்ளவும்
- 🔹தண்ணீர் ஊற்றி இரண்டு தடவை அரிசியை கழுவிய பின் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 🔹குக்கரில் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .
- 🔹ஊற வைத்திருந்த அரிசி கொள்ளை இரண்டையும் குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கினோமானால் கொள்ளு கஞ்சி தயார்
🚫பகிர்வு
🔸தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.
🔸சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.