🏵️பப்பாளி என்பது பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழம்.
🏵️இது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.
🏵️பப்பாளியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுத்திடும்.
🏵️இதில் உள்ள பாப்பெய்ன் என்சைம், புரதத்தை செரிக்க உதவிடும்.
🏵️இது வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்திடும்.
🏵️பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் செல்கள் சேதப்படாமல் பாதுகாக்கின்றன.
🏵️கூடவே, தோல் நிறத்தை ஒளிரச் செய்து, பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவிடும்.
🏵️பப்பாளியில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதய நோய்களின் அபாயத்தை குறைத்திடும்.
🏵️பப்பாளியில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வையை மேம்படுத்திடும்.