எழுத்தாளர்: நௌஷாத் கான் .லி
யோவ் …..ஒரு வாய் சாப்பிடுய்யா …
கடைசி உருண்டை சாப்பிடாம விட்டா உடம்புல எதுவுமே ஒட்டாதாம் …
என் கண்ணு இல்ல ஒரு வாய் சாப்பிடு என் தங்கமே …
போதும் புள்ள ,என்னாலே சாப்பிட முடியலை
ப்ளீஸ் வயிறும் நிறைஞ்சிடுச்சு ,மனசும் நிறைஞ்சிடுச்சு புள்ள ,எனக்கு போதும் புள்ள ,நீ முதல்ல சாப்பிடு…
எனக்கு போதும் புள்ள ,எனக்கு போதும் புள்ள
நீ எவ்வளோ சொன்னாலும் கேட்க மாட்டே ,கடைசி வாய் சோறுல தான் எல்லா சத்தும் நிறைஞ்சு கிடக்குன்னு சொல்லிட்டு அவள் கைகளால் அவனுக்கு வலுக்கட்டாயமாக அன்போடு ஊட்டி விட்டாள்அன்பரசி …
என்ன புள்ள சொல்ல சொல்ல கேட்காம இப்படி சின்னப் புள்ளைக்கு ஊட்டி விடுற மாதிரி சோறு ஊட்டி விடுற ??
என் புருஷன் எப்போதும் எனக்கு சின்ன புள்ள தான் ,யோவ் எனக்கு குழந்தை பிறந்தாலும் நீ தான் எனக்கு முதல் குழந்தை அதை உன் ஞாபகத்துல வச்சுக்கோன்னு சொல்லிட்டு அவனருகே நெருங்கி வந்து உதடுகளை முத்தமிடுவது போல குவித்தாள்..
வேணாம் புள்ள பட்ட பகல்ல வேணாம் புள்ள ,ரூம் கதவு வேற சாத்தாமயே கிடக்கு ,யாராவது வந்தா அசிங்கமா போய்டும் புள்ள ??
நம்ம வீட்ல ,நம்ம ரூம்ல யாருய்யா வர போறாங்க ,சும்மா கிடய்யா-ன்னு சொல்லிட்டு அவன் இதழ்களை கைகளால் குவித்தாள்
வேணாம் புள்ள ,வேணாம் புள்ள …ன்னு கத்தி கொண்டே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான் கோகுல் …
கீழே விழுந்து அடிபட்டதும் தான் தெரிந்தது தான் இதுவரை கண்டது கனவு என்று …அப்போது அன்பரசி பாத்ரூமிலிருந்து குளித்து முடித்து டவலை கட்டிக்கொண்டு அறைக்கு வந்தாள்..
ஹலோ மிஸ்டர் ரூமை விட்டு வெளியே போங்க ,நான் டிரஸ் பண்ணனும்னு சொன்னாள்..
நிச்சயம் ஒருநாள் தன் மனைவி பழைய காதலை மறந்து விட்டு மனதளவில் அவனை முழுமையாக கணவனாக ஏற்றுக்கொள்வாள் என்ற பேரன்பின் நம்பிக்கையோடும் ஒரு புன்னகையோடும் ,தானே வாடிய முகத்தோடு அந்த அறையை விட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினான் கோகுல்…
தான் கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிஜமாகும் என்ற நம்பிக்கையோடு அன்பரசியின் காதலுக்காக அனாதையாக அறையின் வெளியே நின்றது அவன் மனது !!
முற்றும்.