💠தயிர் இட்லி
♦️தேவையான பொருட்கள்:
❇️புளிப்பில்லாத தயிர்- 3 கப்
❇️காய்ச்சி ஆறவைத்த பால்- 1/2 கப்
❇️மினி இட்லிகள் -20 அலல்து 25
❇️பச்சை மிளகாய்-2
❇️துருவிய இஞ்சி- 1/2 தேக்கரண்டி
❇️பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
❇️கறிவேப்பிலை- 4 இலைகள்
❇️தேங்காய்த்துருவல்- 1/4 கப்
❇️காரட் துருவல்- 1/4 கப்
❇️முந்திரிப்பருப்பு- 8
❇️காயம்- 1/2 தேக்கரண்டி
❇️கடுகு-1 தேக்கரண்டி
❇️சீரகம்- அரை தேக்கரண்டி
❇️உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
❇️கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
❇️நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
❇️உப்பு – தேவையான அளவு
♦️செய்முறை:
✴️தயிரை பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
✴️இஞ்சி , பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை கொரகொரப்பாக அரைத்து தயிரில் தேவையான உப்புடன் கலக்கவும்.
✴️பிறகு இட்லிகளை அதில் சேர்த்து கலக்கவும்.
✴️ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு தாளிக்கவும்.
✴️பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காயம், சீரகம் போட்டு சற்று வதக்கி முந்திரியைப் போட்டு சிவந்ததும் தயிரில் கொட்டவும்.
✴️தேங்காய்த்துருவல், காரட் துருவல் சேர்த்து கிளறவும்.
#பகிர்வு
