✨தேவையான பொருட்கள்:
🔻தக்காளி – 3
🔻வெங்காயம் – 1
🔻பச்சை மிளகாய் – 3
🔻அரைத்த தேங்காய் விழுது – 2 கரண்டி
🔻இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
🔻கரம் மசாலா – 1 தேக்கரண்டி
🔻மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
🔻உப்பு தேவைக்கு
🔻கொத்தமல்லித் தழை – தேவைக்கு
✨தாளிக்க:
🔸ஏலம்,
🔸பட்டை,
🔸கிராம்பு,
🔸சோம்பு,
🔸அன்னாசிப்பூ,
🔸பிரியாணி இலை,
🔸புதினா,
🔸எண்ணெய்
✨செய்முறை:
🔹எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
🔹வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
🔹பின் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்ததும், தேங்காய் விழுது சேர்க்கவும்.
🔹தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
🔹கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.