✨இட்லி பொடி
💠தேவையான பொருட்கள்:
🔹3 கை அளவு உளுந்து
🔹3 கை அளவு கடலை பருப்பு
🔹25 வர மிளகாய்
🔹3 முழு பூண்டு
🔹5 கொத்து கருவேப்பிலை
🔹1 கை அளவு கருப்பு மற்றும் வெள்ளை எள்
🔹1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
🔹தேவையான அளவு உப்பு
🔹1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
💠செய்முறை:
🔸தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
🔸ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ளவும்.
🔸கடலை பருப்பு மற்றும் உளுந்து நிறம் மாறியதும் வர மிளகாய் எள் கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும்.
🔸வர மிளகாயில் சூடு ஏறியதும் பூண்டு பெருங்காயத்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
🔸எல்லாம் பொன்னிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.
🔸நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
🔸இப்போது இட்லி பொடி தயார்.
#பகிர்வு