அறுசுவை அட்டில் : உளுந்தம் பருப்பு சட்னி

by Admin 4
20 views

உளுத்தம் பருப்பு சட்னி
            
💠தேவையான பொருட்கள்:
            
🔸உளுத்தம் பருப்பு – 1/4 ஆழாக்கு
🔸தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
🔸பெ.வெங்காயம் – 1
🔸வற்றல் மிளகாய் – 4
🔸உப்பு – 1 ஸ்பூன்
🔸புளி – சிறிதளவு
            
 💠செய்முறை
            
 🔹முதலில் நல்லெண்ணெய் 1 கரண்டி விட்டு மிளகாயை வறுத்துக் கொண்டு பின் வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

🔹பின் உப்பு, புளி, தேங்காய் வைத்து மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்து சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.

🔹இப்போது சுவையான உளுத்தம் பருப்பு சட்னி தயார

You may also like

Leave a Comment

error: Content is protected !!