அறுசுவை அட்டில் : கருவாடு தொக்கு

by Admin 4
20 views

கருவாட்டுத் தொக்கு

💠நெத்திலி கருவாடு 100 கிராம் எடுத்து கருவாட்டின் தலையை கிள்ளி சூடான தண்ணீரில் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

💠ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கருவாட்டை சேர்த்து மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டியும், உப்பு அரை தேக்கரண்டியும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

🔹சின்ன வெங்காயம் 10 பல்

🔹பூண்டு ஐந்து பல்

🔹பாதி நெல்லிக்காய் அளவு புளி
🔹பச்சை மிளகாய் 4
🔹உப்பு அரை தேக்கரண்டி

🔹கருவேப்பிலையை நன்கு இடித்து எடுத்துக் கொள்ளவும்

💠இடித்த பொருட்களை அதே கடாயில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி வதக்கி வறுத்த கருவாடும் சேர்த்து நன்கு கிளறவும்.

💠சுவையான கருவாடு தொக்கு தயார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!