அறுசுவை அட்டில் : தக்காளி தோசை

by Admin 4
17 views

✨தக்காளி தோசை

✴️தேவையான பொருட்கள்:

♦️புழுங்கல் அரிசி ஒரு கப்

♦️பச்சரிசி ஒரு கப்

♦️உளுந்து அரை கப்

♦️ஐந்திலிருந்து ஆறு காய்ந்த மிளகாய்

♦️நறுக்கிய தக்காளி ஐந்து

♦️சோம்பு ஒரு டீஸ்பூன்

♦️உப்பு தேவையான அளவு

♦️எண்ணெய் பொரிப்பதற்கு

✴️செய்முறை:

💠அரிசி பருப்பு, உளுந்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைத்து பின் தக்காளி வரமிளகாய் சோம்பு சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.

💠மாவை மூன்று மணி நேரம் ஊற வைத்து வழக்கம் போல் தோசை சுடுவது போல் இரண்டு புறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்தால் சுவையான தக்காளி தோசை ரெடி.

💠உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் பரிமாறலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!